வியாழன், 18 அக்டோபர், 2012

Ramadas:சேது சமுத்திரத் திட்டம்: அ.தி.மு.க.வின் பிற்போக்கான நிலைப்பாட்டுக்குக் கண்டனங்கள்


 சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்கும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண் டுள்ள நிலைப்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்  ச.ராமதாசு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன்
தமிழகம் மற்றும் தென்னிந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந் தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக சேது சமுத்திர திட்டம் விளங்கும் என்பது பரவலான பொருளாதார நிபுணர்கள் ஆய்ந்தளித்த முடிவாகும்.
இந்நிலையில் தான் பிஜேபி மற்றும் சங் பரிவாரம் போன்ற அமைப்புகள் சேது சமுத்திரத் திட்டம் செல்லும் பாதையில் உள்ள மணல் திட்டு ராமர் கட்டிய பாலம் என்ற மோசடிப் பிரச் சாரத்தை கட்டவிழ்த்து விட்டன.
இப்பிரச்சினையில் தலையீடு செய்ய உச்சநீதிமன்றம் கடந்த 150 ஆண்டு களாக பல்வேறு கால கட்டங்களில் ஆய்வு செய்து முடிவு செய்யப்பட்ட வழித்தடத்திற்குப் பதிலாக மாற்று வழித்தடம் சாத்தியமா என ஆராய சுற்றுச்சூழல் நிபுணர் பச்சோரி தலை மையில் ஒரு குழுவை அமைத்தது.
அக்குழு மாற்றுப்பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்து வது சாத்தியமல்ல என்று அறிக்கை அளித்தது. மத்திய அரசு காலம் தாழ்த் தாமல் இத்திட்டத்தை உறுதியுடன் அமல்படுத்த நீதிமன்றத்தில் நிலைப் பாடு எடுப்பது அவசியமாகும்.
ஏற்கெனவே பணிகள் துவக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ள 6ஆவது வழித்தடத்தில் பணிகளை தொடர் வதே சரியாக இருக்கும். அது மட்டுமே நாட்டின் நலன் சார்ந்த முடிவாக இருக்க முடியும்.
ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த வழித்தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும், அவ்வழியில் உள்ள மணல் திட்டு, ராமர் கட்டிய பாலம் என்றும், அதை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாத மிக வும் பிற்போக்கான நிலைப்பாடாகும்.
மேலும் இந்து மதவெறி அமைப்பு களுக்கு துணை போவதும் அதற்காக நாட்டின் பொருளாதாரத்தை, காவு கொடுப்பதுமான நிலைப்பாடுமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறது. இது தமிழக மக்களின் உரிமைக்கும், உணர் வுக்கும் எதிரான நிலையாகும்.
தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், மத்திய அரசால் ஏற்கெனவே துவங்கப்பட் டுள்ள வழித்தடத்தில், சேது சமுத்திரத் திட்டப்பணியை விரைந்து நிறை வேற்ற துணை நிற்க வேண்டுமெனவும் கோருவதோடு, மத்திய அரசும் இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
மருத்துவர் ச.ராமதாசு
வங்கக்கடலில் சேது கால்வாயின் பாதையில் உள்ள மணல் திட்டை ராமர் பாலமாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்த பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதால் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை தமிழக அரசே முடக்கத் துடிப்பது கண்டிக்கத் தக்கது. தமிழர்களின் 150 ஆண்டுகால கனவுத்திட்டமான சேது கால்வாய் திட்டத்தை முடக்கிப்போட வேண் டும் என்றும் கருதுவது தமிழக நல னுக்கு எதிரானதாகவே அமையும். சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ப தால் இதை எப்படியாவது முடக்கி விடவேண்டும் என்று இலங்கை அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு சாதக மாகவும், தமிழகத்திற்கு எதிராகவுமே அமையும் என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும். கற்பனைக் கதை களுக்கு செவிமடுக்காமல், சேது கால் வாய் திட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழக அரசு மாற் றிக்கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தமிழக அரசு திரும்பப் பெற் றுக்கொண்டு, தமிழகத்தின் வளர்ச் சிக்கான சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- இவ்வாறு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக