சனி, 27 அக்டோபர், 2012

மேலும் இரு தேமுதிக MLA க்களுடன் ஜெயா வளர்ச்சிப்பணி பற்றி ஆய்வு

 2 Dmdk Mlas Meets Jayalalitha தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் முதல்வரை சந்தித்து பேச்சு விஜயகாந்த் கட்சி சீக்கிரம் டமால் 

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவை மேலும் இரு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏவான அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இரு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை திடீரென நேரில் சந்தித்துப் பேசினர். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

தேமுதிக வட்டாரம் இந்த எம்.எல்.ஏக்களின் செயலால் பெரும் அதிர்சசியில் மூழ்கியுள்ளது. கட்சி உடையுமா என்ற பெரும் பரபரப்பும் கூடியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக