சனி, 27 அக்டோபர், 2012

America கடத்தப்பட்ட 10 மாத இந்திய குழந்தை மரணம் கடத்தி கொன்றவரும் இந்தியர்


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தை சான்வி வென்னா, கடந்த திங்களன்று அவர்களது குடியிருப்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்டது. குழந்தையைக் கடத்தியவர்கள், குழந்தையை கவனித்து வந்த அதன் பாட்டியைக் கொலை செய்துவிட்டு குழந்தையைச் கடத்திச் சென்றனர்.
இந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டுவதற்காக குழந்தையைக் கடத்திச் சென்றது பெற்றோரின் குடும்ப நண்பர் ரகுநந்தன் யந்தாமுரி என்பதும், அவர் குழந்தையை சூட்கேசில் அடைத்து வைத்திருந்ததால், குழந்தை மூச்சு விட முடியாமல் இறந்துவிட்டதும் தெரிய வந்துள்ளது.
பெற்றோருடன் சேர்ந்து, குழந்தையை கடத்தியவரும், குழந்தையைத் தேடுவது போல நாடகமாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
குழந்தையை கடத்தியவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை, மோசடி, திருட்டு ஆகிய வழக்குகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர் http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக