ஞாயிறு, 7 அக்டோபர், 2012

அள்ளுவாரா அலெக்ஸ் பாண்டியன்?

நடிகர் கார்த்தி தென்னிந்திய திரையுலக ரசிகர்களை குறுகிய காலத்தில் கவர்ந்த நடிகர். தமிழ் படங்களுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ரசிகர்கள் கார்த்திக்கு உண்டு. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள அலெக்ஸ்பாண்டியன் படம் வருகிற தீபாவளிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படமும் ரிலீஸாவதால், இவ்விரு படங்களில் வசூலை அள்ளி குவிக்கப் போவது எந்த படம்? என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்தது. ரஜினி நடிப்பில் டிசம்பர் 12-ஆம் தேதி கோச்சடையான் எவ்வித போட்டியும் இல்லாமல் தனியே உலகம் முழுவதும் ரிலீஸாகவிருந்தது.ஆனால் அலெக்ஸ் பாண்டியன் படம் ‘பேட் பாய்’ என்ற பெயரில் தெலுங்கில் டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸாவதால் தெலுங்கில் கோச்சடையானும், அலெக்ஸ்பாண்டியனும் மோதுகின்றன. தமிழில் விஜய் நடிக்கும் படத்துடனும், தெலுங்கில் ரஜினி நடிக்கும் படத்துடனும் ரிலீஸாகி வசூலை அள்ளுவாரா அலெக்ஸ் பாண்டியன்?
என்பது ரசிகர்களின் கேள்வி.கடைசியாக கார்த்தி நடிப்பில் ரிலீஸான சகுனி படம் ரசிகர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு ரிலீஸாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக