ஞாயிறு, 7 அக்டோபர், 2012

உலகின் மிகப்பெரிய Beer திருவிழா இன்று இறுதி நாள்..

நம்ம ஊரு பொண்ணு ஒண்ணு  கையிலே கூட பியரு ஜொலிக்குது ஜோரு அக்டோபர்ஃபெஸ்ட் (Oktoberfest) என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருந்தால், நீங்கள் ஐரோப்பாவில் உள்ள நபர். அல்லது, ஜெர்மன் விவகாரங்களில் ஆர்வமுடைய நபர். அதுவும் இல்லையென்றால், பீர் பிரியர்!
இந்த அக்டோபர்ஃபிஸ்ட் என்பது ஜெர்மனி, மியூனிக் நகரில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நடைபெறும் பீர் திருவிழா! இந்த அக்டோபர் திருவிழா அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இது, பீர் திருவிழாவின் 179-வது ஆண்டு!

179-வது ஆண்டு பீர் திருவிழாவை சம்பிரதாயப்படி, மியூனிக் நகர மேயர் Christian Ude தொடக்கி வைத்தார். முதலாவது பேரலில் இருந்து பீரை தமது கையில் இருந்த ‘மக்’கில் எடுத்து உயர்ந்திய அவர், இந்த விழாவை தொடக்கி வைக்கும் பாரம்பரிய வாக்கியத்தை சொன்னார் – “O’zapft is!” (“It’s tapped!”)
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதி நாள். இந்த 1 வார பீர் திருவிழாவில், மொத்தம் 6 மில்லியன் பீர் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கணிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நடந்த பீர் திருவிழாவின் புள்ளிவிபரத்தை வைத்து இந்த எண்ணிக்கையை ஊகித்திருந்தார்கள். கடந்த ஆண்டு பீர் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், குடித்த 1 லீட்டர் பீர் ‘மக்’குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
8 மில்லியன்! அதாவது, 8 மில்லியன் லீட்டர் பீர் குடிக்கப்பட்டது.
திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். ஆனால், நீங்கள் குடிக்கும் பீருக்கு பணம் கொடுத்துவிட வேண்டும். இந்த ஆண்டு விலை சற்று அதிகமாக உள்ளது. மொத்தமுள்ள 14 ரக பீர்கள் அனைத்தும் ஒரே விலைதான். 1 லீட்டர் மக், 9.50 யூரோ ($12.30)
யூரோ நாணயம் வராத நாட்களில், 1980களின் இறுதியில் 1 லீட்டர் பீர் 2 மார்க் (அந்த நாளைய ஜெர்மன் நாணயம்) விலைக்கு விற்பனையான காலமும் உண்டு. 1990களின் ஆரம்பத்தில் கனேடியன் ஏர்லைன்ஸ் டொரான்டோவில் இருந்து மியூனிக்குக்கு புதிய ரூட் அறிமுகம் செய்தபோது, அக்டோபர்ஃபிஸ்ட் வாரம் முழுவதும், ஜெர்மன் பீர் வழங்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
அக்டோபர்ஃபிஸ்ட் உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா என அறியப்பட்டுள்ளது. இப்போதல்ல, 1810-ம் ஆண்டில் இருந்தே இந்த பெயர் இந்த திருவிழாவுக்கு உண்டு. 1810-ல், ஜெர்மன் இளவரசர் லுட்விங், தெரசேவை திருமணம் செய்தபோது, நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்து, மியூனிக் நகரில் கொடுத்த விருந்துதான், முதலாவது அக்டோபர்ஃபிஸ்ட். இளவரசர் லுட்விங் ஒரு பீர் பிரியர்.
பீர் குடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அதற்காக ஒரு திருவிழா கொண்டாடும்போது. அதில் பீர் குடிப்பதுதான் பெரிய விஷயம். ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் பீர் பிரியர்கள் இந்த வாரத்தில் மியூனிக் நகரில் கூடுகிறார்கள். இந்த பீர் திருவிழாவில் வேறு மது வகைகளுக்கு அனுமதி கிடையாது. ஒன்லி பீர்தான்!
உலகிலேயே சிறந்த பீர்கள் கடைக்கும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. சம்பிரதாயமான மால்ட் பீர்களில் இருந்து, ட்ரை பீர், ஐஸ் பீர் (பீரை உறைய வைத்து, அதிலுள்ள நீர் ஜஸ் ஆகும்போது, அந்த ஐஸ் படிவுகளை பிரித்து அகற்றி தயாரிக்கப்படுவது) என்று பல்வேறு ரகங்களில் பீர்கள், கிடைக்கும். பாட்டில் பீர்கள் அல்ல இவை. தயாரிக்கப்பட்டு பாரல்களில் அடைக்கப்பட்டு, அதிலுள்ள டப்கள் மூலம் ‘மக்’குகளில் எடுக்கப்படும் டராஃப்ட் பீர்கள்.
நம்ம டாஸ்க்மாக் கடைகளில் பீர் என விற்கப்படும் பானத்துக்கும், இவற்றுக்கும் இடையே, 1008 வித்தியாசங்கள் உள்ளன.
179-வது ஆண்டு பீர் திருவிழாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை அடுத்தடுத்த பக்கங்களில் தருகிறோம். ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லாதபடி, படங்களே எல்லாவற்றையும் விளக்கிவிடும் விதத்தில் உள்ளன.
பீர் கிளாஸ்களை அடுக்கிவரும் நங்கைகள் முதல், பீர் அடித்துவிட்டு சாப்பிடும் சிக்கன் பார்பர்-க்யூவில் தொடர்ந்து, போதை அதிகமாகி புல்வெளிகளில் தூங்கும் பீர் பிரியர்கள் வரை காண, அடுத்தடுத்த பக்கங்களுக்கு வாருங்கள். (ஏனுங்க.. தமிழ் வெப்சைட்தானா இது?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக