செவ்வாய், 9 அக்டோபர், 2012

காவிரி நீரை நேற்று அடாவடியாக முடியபின் இன்று பிரதமருடன் சந்திப்பு!

Viruvirupu
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, காவிரி ஆணையத்தை மீண்டும் கூட்டக் கோரி பிரதமரிடம் கர்நாடகா இன்று புதிய மனுவை சமர்ப்பிக்க உள்ளது. நேற்று இரவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியபின், இன்றைய சந்திப்பு நடக்கவுள்ளது.
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நதிநீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் தலைமைப் பொறியாளர் விஜயகுமார், “கர்நாடக அரசின் உத்தரவுப்படி காவிரி நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கு இதுவரை 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டதாகவும், அணையில் தற்போது 19 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக