திங்கள், 8 அக்டோபர், 2012

ஆஷா போஸ்லே மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மும்பை: பிரபல இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லேயின் மகள் வர்ஷா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆஷா போன்ஸ்லேயின் மகள் வர்ஷா (55) பத்திரிகையாளராக பணியாற்றியவர். அவர் விளையாட்டுத் துறை பத்திரிகையாளரான ஹேமந்த்தை திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் திடீரென வர்ஷாவின் வீட்டில் துப்பாக்கிச் சப்தம் கேட்டதால் அண்டை வீட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது வர்ஷாவின் தற்கொலையை உறுதி செய்தனர். அவர் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். இதற்கு முன்பும் சில முறை வர்ஷா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
வர்ஷாவின் தாயார் ஆஷா போன்ஸ்லே மராத்தி கலாசார விருதுகள் விழாவில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக