திங்கள், 8 அக்டோபர், 2012

நம்பலாமா? லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்: விஜயகாந்த் அறிவிப்பு

 Dmdk Go Alone Ls Polls
 மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் தமது தொகுதியான ரிஷிவந்தியத்தில் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறி தேமுதிகவுடன் தனி அணி அமைக்கக் கூடும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அதிமுகவுடனான தேமுதிக உறவும் முறிந்து போய்விட்டதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ஆனாலும் விஜயகாந்த்தின் அறிவிப்பு தற்காலிகமானாதாகத்தான் இருக்கும் என்கின்றனர் தேமுதிகவினர். ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டே வந்தால் விஜயகாந்த் சொல்வதை நம்பலாம்..
ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களை பெற்று எதிர்க்கட்சியாகிவிட்டது தேமுதிக. மக்களவைத் தேர்தலிலும் இந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேறுவழியே இல்லாமல் திமுகவுடன்தான் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார் என்றே கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக