செவ்வாய், 23 அக்டோபர், 2012

சின்மயி புகார் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

205023921_20231f4f25_b
இன்று சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரால், தேசிய ஆடை வடிவமைப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் என்பவர், கைது செய்யப்பட்டுள்ளார்.  ராஜன்லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் எழுதிவரும் ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்கள் இருவரைத் தவிர செந்தில்குமார்,  மந்திரமூர்த்தி, சரவணக்குமார், ராமநாதன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66 A மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை சந்தித்ததால் உங்களுக்கு அவரோடு நெருக்கம் என்று நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயையும், ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் ஜெயலலிதாவுக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல அதிகாரிகளையும் வைத்தே இந்த வழக்கும், கைது நடவடிக்கைகளும் நடந்தேறியிருக்கின்றன.  நாளை வேறு ஒரு பெண், இதே போன்ற புகாரை காவல்துறையில் அளித்தால், அது கமிஷனர் அலுவலக குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்.http://savukku.net/home1/1680-2012-10-23-05-56-48.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக