சென்னை :கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைந்து மின் உற்பத்தி தொடங்க கோரி சமக சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடுமையான மின்பற்றாக்குறை உள்ள நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. என்றாலும் தினமும் ஒரு போராட்டங்கள் அங்கு நடத்தப்படுகிறது. இதைக்கண்டித்தும், கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தியும் சமக சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்படும். கூடங்குளம் திட்டம் தொடர்பான விளக்கங்கள் குறித்து 5 லட்சம் புத்தகங்கள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 2 அக்டோபர், 2012
கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்க சமக விழிப்புணர்வு பேரணி
சென்னை :கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைந்து மின் உற்பத்தி தொடங்க கோரி சமக சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடுமையான மின்பற்றாக்குறை உள்ள நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. என்றாலும் தினமும் ஒரு போராட்டங்கள் அங்கு நடத்தப்படுகிறது. இதைக்கண்டித்தும், கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தியும் சமக சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்படும். கூடங்குளம் திட்டம் தொடர்பான விளக்கங்கள் குறித்து 5 லட்சம் புத்தகங்கள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக