செவ்வாய், 2 அக்டோபர், 2012

பீகாரில் 40 தொகுதிகளிலும் பா.ஜ. தனித்துப் போட்டி

பீகாரில் 40 லோக்சபா ‌தொகுதிகளிலும் பா.ஜ. போட்டியிட உள்ளதாக அம்மாநில பா.ஜ. தலைவர் தெரிவித்தார். பீகாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதீஷ்குமாரும், துணை முதல்வராக பா.ஜ.வின் சுஷில்குமார் மோடியும் உள்ளார். கடந்த சில மாதங்களாக பா.ஜ.வுடன் மோதல் போக்கினை நிதிஷ்குமார் கடைபிடித்து வருகிறார். பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை மறைமுகமாக விமர்சித்தார்.
இந்த சூழ்நிலையில் பா.ஜ. பீகார் மாநில தலைவர் சி.பி.தாக்கூர் கூறுகையில், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் , 40 தொகுதிகளிலும் பா.ஜ. தனித்தே போட்டியிடும், இது குறித்து சமீபத்தில் சூரஜ்குந்த் நகரில் நடந்த பா.ஜ. தேசிய செயற்குழுக்கூட்டத்தில் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் விரிவான அறிக்கையுடன் வலியுறுத்தியுள்ளேன். எனவே பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தினை எதிர்த்து பா.ஜ. 40 தொகுதிகளிலும் போட்டியிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக