புதன், 17 அக்டோபர், 2012

சவூதி நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதடலாம்


Saudi Arabia intends to allow local women to practise law in a departure from a long-standing policy of banning female lawyers due to social and religious constraints, a Saudi newspaper has reported.சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது.
கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் வக்கீல்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் சவுதி நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமெனவும் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா சட்டப்படி அந்நாட்டு பெண்கள் பொது இடங்களில் ஆண் துணையின்றி சுற்றுவது, கார் ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தடைவிதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக