வியாழன், 18 அக்டோபர், 2012

காவிரி நீரை தர மறுப்பது நாங்கள் அல்ல..தமிழக பா.ஜ.க

கருணாநிதியை நாங்கள் கணக்கெடுப்பது இல்லை” -பயந்த சுபாவ பா.ஜ.க.

Viruvirupu “கர்நாடகாவில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வந்தாலும், காவிரி நீரை தர மறுப்பது நாங்கள் அல்ல. தமிழகத்திற்கு காவிரி நீர் அளிக்க, கர்நாடக முதல்வரும், பா.ஜ.க. தலைவர்களும் தயாராக உள்ளனர். ஆனால் கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சியான காங்கிரஸூம், கன்னட மொழி குழுவினரும், கர்நாடக அரசை மிரட்டி காவிரி நீர் திறந்து விடுவதை தடுத்து வருகின்றனர். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. அரசுசெயல்பட வேண்டியுள்ளது” என்கிறார்பொன்.ராதாகிருஷ்ணன் .
“கருணாநிதி கூறுவதையெல்லாம் நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை. அவர் இன்றைக்கு ஒன்று கூறுவார். நாளைக்கே அது தவறு என்று பல்டி அடித்துவிடுவார்” என்று கூறியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.
அந்தக் கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சேலத்தில் வைத்து இதை தெரிவித்துள்ளார். “கர்நாடக அரசை 356-ம் பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது பேச்சுக்கு மதிப்பு அளிக்க நாங்கள் தயாராக இல்லை.
அவர் இன்று கலைக்க வேண்டும் என்று கூறுவார். ஆனால் நாளை அதே கருத்தை தவறு என்று கூறுவார். எனவே அவரது பேச்சுக்கு மதிப்பு அளிக்க முடியாது” என்றார் அவர்.
கருணாநிதி, கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று கூறிய காரணம், தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு தர மறுத்த காரணத்தால்தான். அந்த மாநிலத்தில் ஆட்சி செய்வது பா.ஜ.க.
அப்போ, காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுப்பது யார்? அதற்கும் பதில் வைத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
“கர்நாடகாவில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வந்தாலும், காவிரி நீரை தர மறுப்பது நாங்கள் அல்ல. தமிழகத்திற்கு காவிரி நீர் அளிக்க, கர்நாடக முதல்வரும், பா.ஜ.க. தலைவர்களும் தயாராக உள்ளனர். ஆனால் கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சியான காங்கிரஸூம், கன்னட மொழி குழுவினரும், கர்நாடக அரசை மிரட்டி காவிரி நீர் திறந்து விடுவதை தடுத்து வருகின்றனர். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. அரசுசெயல்பட வேண்டியுள்ளது” என்கிறார் இவர்.
மாநில அரசை நடத்தும்போதே, எதிர்க்கட்சிக்கும், கன்னட மொழிக் குழுவுக்கும் பயந்து தண்ணீரை பூட்டும் இவர்கள், நாளை மத்தியில் பதவிக்கு வந்தால், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பயந்து எதையெல்லாம் பூட்டுவார்களோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக