வியாழன், 18 அக்டோபர், 2012

அழகிரி மகனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு தடை

>மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒலிம்பஸ் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்ய மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி துரை தயாநிதி சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,  ‘’நான் ஏற்கனவே என் மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தேன். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

என் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அந்த மனு நிலுவையில் உள்ளது. பின்னர் மீண்டும் நான் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளேன். நான் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்க முடியாது. எனவே என் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றொரு கோர்ட்டில் நடந்து வருவதால் இந்த மனு மீதான விசாரணையையும் அந்த கோர்ட்டுக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.துரை தயாநிதியின் முன்ஜாமீன் தொடர்பான மனு மீதா ன விசாரணை நீதிபதி மதிவாணன் முன்னிலை யில் நடந்து வருகிறது. எனவே பிடி வாரண்டை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை அந்த கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

இன்று நீதிபதி மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்தது.  அரசு தரப்பில் முன் ஜாமின் மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் நிலுவையில் இருக்கும்போது கீழ் நீதிமன்றம் இந்த பிடிவாரண்ட் பிறப்பித்ததில் உள்நோக்கம் இருக்கிறது.

எனவே இதை ரத்து செய்யவேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி வாதாடினார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.  மேலும் கைது பிடிவாரண்டுக்கு இடைக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக