வெள்ளி, 19 அக்டோபர், 2012

துபாய் சரவணபவன் ஓட்டலில் ஊழியர் மர்ம மரணம் -சென்னை போலீசில் புகார்

சென்னை: மிகப் பிரபலமான பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் சரவணபவன் ஓட்டல் இப்போது ஒரு மர்ம மரண் சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
திருச்சி லால்குடி அடுத்த மருதூரைச் சேர்ந்த தெய்வமணி சென்னை சரவணபவன் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். துபாயில் சரவணபவன் கிளை திறக்கப்பட்டதால் தெய்வமணியும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதியன்று தெய்வமணி ஓட்டல் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக அவரது குடுபத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தெய்வமணியின் சகோதரர் சக்திவேல், தமது சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக சரவணபவன் நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். இதேபோல் தெய்வமணியின் உடலை தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கையையும் சரவணபவன் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.

இதனால் சரவணபவன் நிர்வாகம் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை சக்திவேல் கொடுத்திருக்கிறார். அதில்,தமது சகோதரர் தானாக தவறி விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆக அண்ணாச்சிக்கு இப்ப ‘கெரகம்' சரியில்லையோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக