சனி, 27 அக்டோபர், 2012

சிபாரிசுக்கே இடமில்லேண்ணே...!': ஸ்டாலின் திட்டவட்டம்

மதுரை:""தி.மு.க., நிர்வாகிகள் தேர்வில், சிபாரிசுகளுக்கு இடமில்லை; நிர்வாகிகள் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.மதுரையில் நேற்று முன்தினம், "இளைஞரணி நிர்வாகிகள் தேர்வில், என் சிபாரிசுகள் ஏற்கப்படவில்லை' என, மத்திய அமைச்சர் அழகிரி, குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவருக்கு ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார். திரும்ப திரும்ப சொன்னாலும் உண்மை உண்மை தான் , பொய் பொய் தான்
தூத்துக்குடி தி.மு.க., செயலர் பெரியசாமி, நில அபகரிப்பு வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் நேற்று அவரை சந்தித்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பெரியசாமி மீது, அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். தெம்புடனும், துணிச்சலுடனும் உள்ளார். வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளார்.  dinamalar,com

தி.மு.க., இளைஞரணியில், நிர்வாகிகள் தேர்வு குறித்து, நான் ஏற்கனவே, தெளிவாகக் கூறினேன். முறைப்படி நேர்காணல் வைத்து, தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சிபாரிசுகளுக்கு இடம் இல்லை. இந்நிலையில், மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்த கருத்தை ஒப்பிட்டால், சிபாரிசு இன்றி தேர்வு நடந்துள்ளது என்பது தெளிவாக புரிகிறது.
அழகிரி கருத்து தொடர்பாக, நான் அழகிரியிடமோ, கட்சி தலைமைக்கோ பேசவேண்டிய அவசியம் இல்லை. இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்து, பல பத்திரிகைகளும், எதிர்கட்சியும் தவறான கருத்துக்களை கூறி வருகின்றன.
வரும், 30ல், லண்டன் செல்கிறேன். நவ., 3, 4ம் தேதியில் ஜெனிவாவில், ஐ.நா., பொது செயலர் பான் கி மூனை நேரில் சந்தித்து, "டெசோ' மாநாட்டு தீர்மானங்களை அளிக்கவுள்ளேன். நவ., 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் லண்டனில் நடக்கும் இலங்கை தமிழர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் 10 நாள்சிறையில் இருக்கலாம்! ........


சிறைக்குள் பெரியசாமியை சந்தித்த ஸ்டாலின், உடல் நலம் குறித்து அவரிடம் கேட்டபோது, "நான் இப்போது தெம்பாக உள்ளேன். வெளியில் இருக்கும்போது, எப்போதுமே, "ஏசி'யில் இருந்து பழகியதால், "சளி' தொடர்ந்து இருந்தது. இப்போது, "ஏசி' இல்லை, காலையில் "வாக்கிங்' போகிறேன். இதனால் சளி தொல்லை ஒழிந்தது' என்று கூறியுள்ளார். "அப்ப இன்னும், 10 நாட்கள் சிறையில் இருக்கலாம்' என, ஸ்டாலின், "கமென்ட்' அடித்துள்ளார்.
போலீசை தள்ளி விட்ட தி.மு.க.,வினர்:


மத்திய சிறை முன், சாலையில், ஸ்டாலின் கார் வெளியே நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி, சிறை வளாகத்துக்குள் நடந்து செல்லுமாறு, அவருக்கு போலீசார் கூறினர். இதனால் உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள், கதவைத் தள்ளினர்.அப்போது போலீஸ், தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில போலீசார் மட்டுமே இருந்ததால் அவர்களை தள்ளி விட்டு சிறை முன்பகுதிக்கு, தி.மு.க., தொண்டர்கள் அத்துமீறி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக