சனி, 27 அக்டோபர், 2012

படப்பிடிப்பில் அழுத அனுஷ்கா! கோடம்பாக்கம் மாபியா சங்கங்கள்


அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் அழுத அனுஷ்கா
தனக்கென்று சொந்தமாக மேக் அப் பெண் வைத்துள்ளார் அனுஷ்கா. கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில்தான் இதற்கான சிக்கல் உருவானது. யூனியனில் மெம்பராக இல்லாதவரை மேக் அப் போட அனுமதிக்க முடியாது என்று கண்டபடி திட்டி அனுஷ்காவை அழவைத்தனர் சங்க உறுப்பினர்கள்.

இதனை மனதில் வைத்துக்கொண்டிருந்த அனுஷ்கா ஜார்ஜியாவில் நடந்த ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த பரிசும் வழங்காமல் வெறும் விருந்துடன் நிறுத்திக் கொண்டாராம்
ஜார்ஜியாவில் தனக்கு கார் ஓட்டிய டிரைவருக்கு மட்டும் கார் வாங்கிக் கொடுத்துள்ளார் அனுஷ்கா. இதை பெருமையுடன் அந்த டிரைவர் சொன்னபோது இது தங்களை சீண்டிப்பார்க்கும் செயல் என்று பொருமியுள்ளனர் யூனிட்டை சேர்ந்தவர்கள்.
நான் நடிக்கவேண்டும் என்றால் என்னுடைய மேக் அப் பெண்தான் என்முகத்தை தொட்டு மேக் அப் போடவேண்டும் என்பது அனுஷ்காவின் வாதம்

 இத்தனை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் தன்னுடைய மேக் அப் பெண்ணை யூனியனில் மெம்பராக்கவில்லையாம் அனுஷ்கா. யாராக இருந்தாலும் யூனியனில் மெம்பராகவேண்டும் என்று பெப்சி மேக் அப் யூனியன் கறார் காட்டுகிறது.
மேப் அப் பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சினையால் ஜார்ஜியாவில் நடந்த ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில் வேறு யாரையும் தொடவிடாமல் தானாகவே மேக் அப் போட்டுக் கொண்டாராம் அனுஷ்கா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக