புதன், 3 அக்டோபர், 2012

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா

டெல்லி: நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.
அரசுக்கு நஷ்டம் என்பதை ஊழல் என்று மாற்றியது ஏன்?
திமுகவை அடக்கி வைக்கவே ராசா மீது மோசமான வழக்கு புனயப்பட்டதோ என்று என்ன தோன்றுகிறது . அண்மையில் உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக அளித்த ஒரு கருத்து, சேவைகள் மக்களுக்கு சேரவேண்டுமே அல்லாது லாபநோக்கம் மட்டுமே அரசு பார்க்க கூடாது என்ற கருத்து ராசாவின் கொள்கைக்கு கிடைத்த பூஸ்ட் என்று கொள்ளலாம்
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசா நியமிக்கப்பட்டுள்ளனர்.


காங்கிரசுடன் பல்வேறு பிரச்சனைகளால் மத்திய அமைச்சரவையில் சேர மறுத்து வரும் திமுகவை தாஜா செய்யும் வகையிலேயே ராசாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்மூலம் ராசா மீது மத்திய அரசு இனியும் தீவிர நடவடிக்கைகளில் இறங்காது என்பது உறுதியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக