ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்: மம்தா மகிழ்ச்சி

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார் மம்தா மோகன்தாஸ்.
‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். அவர் கூறியதாவது:

சினிமா துறையில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹீரோயின்களை பொறுத்தவரை அந்த முக்கியத்துவம் குறைவுதான். சமீபத்தில் ‘முசாபிர்’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். இதில் திவ்யா உண்ணி ரீ என்ட்ரியாகிறார். பரதநாட்டிய பெண்ணாக அவர் நடிக்கிறார். அப்போது இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தோம்.
இன்டஸ்ரியில் இப்போது ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து நிறைய பேசினோம். குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது பற்றி விவாதித்தோம். அதை கவனமாக கேட்டார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த திவ்யா, இப்படத்தில் நடித்தாலும் தொடர்ந்து நடிப்பாரா என்பது பற்றி உறுதியாக சொல்லவில்லை. ‘மீண்டும் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. இப்படத்தில் ஷோபனாதான் பரதநாட்டிய பெண்ணாக நடிக்க கேட்கப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போனதால் என்னை இயக்குனர் அணுகினார். அதனால் நடித்தேன். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறேன். அதில்தான் முழுகவனமும் இருக்கிறது’ என்றார் திவ்யா.

இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக