சனி, 6 அக்டோபர், 2012

புரட்சித் தலைவியின் லட்சியம் தொண்டு தியாகம்? தீக்குளிக்க ஆள் தேவைங்கோ

அதிமுகவின் வாய்தா ராணி விடுக்கும்  அரச கட்டளை :ஜெயலலிதாவுக்காக  எத்தகைய தியாகத்திற்கும் தயார், தயார் என உளமாற உறுதி கூறுகிறோம்’’
அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதலமைச்சர், லட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் எங்களை உளப்பூர்வமாக இணைத்துக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அஞ்சாத உறுதியுடனும், ஆளுமைத் திறனோடும் கழகப் பணியாற்றுவோம்.
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளைச் சேர்ந்த செயல் வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பின்னர் நிகழ்ச்சிகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  வேறொன்னும் இல்லீங்க சொத்து சேர்த்த வழக்கு பெயிலியரான தீக்குளித்து ஏதாவது பண்ண ஆள் வேணுமுங்கோ 

 அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதலமைச்சர், லட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் எங்களை உளப்பூர்வமாக இணைத்துக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அஞ்சாத உறுதியுடனும், ஆளுமைத் திறனோடும் கழகப் பணியாற்றுவோம்.
 கழகத்தின் கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றி கழக மாண்புகளைப் பேணிக்காத்து, கழக வளர்ச்சிக்கு உணர்வோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்து உழைப்போம்.
 இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மீது மாறாத பற்றோடும், விசுவாசத்தோடும் திகழ்ந்து, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் போர் வீரர்களாக, வீராங்கனைகளாக லட்சிய வேட்கையோடு மக்கள் பணி ஆற்றுவோம்.
 தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த வடிவமாகத் திகழும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை எந்நாளும் காப்போம், பாசறையின் பணிகளுக்கு எங்களை முழு மனதோடு அர்ப்பணிக்கிறோம்.
 நாங்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயார், தயார் என உளமாற உறுதி கூறுகிறோம்’’என்று கூறப்பட்டுள்ளது.

 அதிமுகவின் இந்த அறிக்கையால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக