சனி, 6 அக்டோபர், 2012

ஜெயம்ரவி நீதுசந்திரா நடித்த 'ஆதிபகவன்' படப்பிடிப்பு முடிந்தது

நீண்..........ட நாட்களாக இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வந்ததும் இதனால் மற்ற படங்களில் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் காத்துகிடந்ததும் அனைவரும் அறிந்ததே. ஒரு வழியாக பாடல்கள் வெளியீட்டு விழா நடப்பதை நினைத்து பெருமூச்சு விடுகிறார் ஜெயம் ரவி. திரைதுறையில் தற்போது நடந்து வரும் பிரச்சனைகள், இயக்குனர் சங்க பிரச்சனை, ஃபெஃப்சி தேர்தல் என பல விஷயங்களில் அமீர் பிஸியாக இருந்ததால் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று பேசப்படுகிறது.  
நாளை 06.10.2012 அன்று கனடாவில் டொரொண்டோ நகரில் ஆதிபகவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இயக்குனர் அமீர், இசையமைபாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஜெயம் ரவி, நீது சந்திரா, தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் என அனைவரும் விழாவில் கலந்துகொள்ள கனடா செல்கின்றனர். அமீரின் நண்பர்களான இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ஜனநாதன் இருவரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.
அமீரின் ஆதிபகவன் படத்தில் நடித்து முடிக்க நீண்ட காலம் செலவானதால், இனி வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் ஜெயம் ரவி. ஆதிபகவன் படத்தின் கதாபாத்திரதிற்காக நீண்ட தாடி வளர்த்திருந்தார் ஜெயம் ரவி. அதனால் மற்ற படங்களில் அவரால் நடிக்க முடியாமல் போனது. ஆதிபகவன் ஷூட்டிங் முடிந்து படம் திரைக்கு வரும் வேலைகள் நடந்து வருகிறது. 

இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஒன்று சமுத்திரகனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், மற்றொன்று திரிஷாவுடன் நடிக்கும் பூலோகம். இந்த இரண்டு படங்களிலும் கூட வித்தியாசமான கேரக்டர்களில் தான் நடிக்கிறார். அடுத்து ஜெயம் ரவி - ஜீவா இருவரும் ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிவருகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக