புதன், 3 அக்டோபர், 2012

கொந்தளிக்கும் கேரளகட்சிகள் வரலாற்றுச் சின்னத்தை அழிக்காதே!



            செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலத்தின் புனலூர் வரை செல்கிறது மதுரை ரயில்வே டிவிசனுக்குட்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை, இந்த ரயில்வே லைன் கேரளாவின் புனலூர் சமீபம் உள்ள எடமன் என்ற பகுதியிலிருக்கும் வானுயர்ந்த 13 கண்களைக் கொண்ட பாலத்தின் மீது செல்கிறது இயற்கை வளம் மண்டிக்கிடக்கும் அந்தப் பாலத்தின் மீது ரயில் செல்வது கண் கொள்ளரக்காட்சி இதனைக் காண்பதறகென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கே குவிகின்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்ப்பட்ட இந்த பாலம் உறுதித் தன்மை கொண்டதாய் சரித்திரத்தில் இடம் மெற்றுள்ளது.


           தற்போது மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றுப்படுவதையடுத்து செங்கோட்டை புனலூர் மார்க்கமும் திட்டத்தில் கொண்டு வரப்பட்டது. 13 கண் பாலத்தின் மீது அகலரயில் சென்றால் அது தாங்காது எனவே 13 கண் பாலத்தின் கல் கட்டுப்பகுதியை கான்கிரீட் தளம் பதித்து உறுதியாக்க வேண்டும் என மதுரை டிவிசன் ரயில்வே துறை முடிவெடுத்தது.
 ரயில்வே துறையின் இந்த முடிவு கேரள மக்களை குறிப்பாக அனைத்துகட்சியினரையும் கொதிப்பில் தள்ளியது. 13 கண் பாலம் வரலாந்து சின்னம் கான்கிரீட் பூசினால் அதன் சிறப்புத்தன்மை மறைந்து வடும் எனவே சிமெண்ட் பூச்சு பூசாமல் கல்கட்டுகளை உறுதிப்படுத்துங்கள் என கேரளாவின் சி.பி.ஜ. சி.பி.எம். ஆர்.எஸ்.பி. பி.ஜே.பி. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன எம்.ஏ.பிலிப் என்பவரின் தலைமையில் அக.2 கேரளாவின் ஆரியங்காவிலிருந்து நடைப்பயணமாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து,
 ஸ்டேசன் மாஸ்டரிடம் மனுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர் அதன்படி 70 பேர் பேரணியாய் வந்தவர்களை கேரள பார்டரில் கேரள போலீஸ் மடக்கியது பேரணி வேண்டாம் உங்களின் பிரதிநி 2 பேர் சென்று மனு கொடுங்கள் என்று சொல்லப்பட அதன்படி பிலிப் செங்கோட்டை சென்று ஸ்டேசன் மாஸ்ட்ரிடம் மனு கொடுத்தார் இச்சம்பவம் கேரளவாசிகளின் போரட்டத்தை திவிரபடுத்தியுள்ளது.
படங்கள் : ராம்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக