சனி, 6 அக்டோபர், 2012

கிங்பிஷர் நிறுவனத்திற்கு மனிதநேய? அடிப்படையில் வங்கிகள் உதவி

கிங்பிஷர் நிறுவனத்திற்கு  வங்கிகள் நிதியுதவி!விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் விமான போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டது. விமான போக்குவரத்து துறை சார்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.இதனால் அந்நிறுவனத்தின் சேவைகள் 7-ம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சம்பளம் இல்லாததால் பல ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கின்றனர்.டெல்லியில் உள்ள ஒரு ஊழியரின் மனைவி பணக்கஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டார். எனவே, சம்பளப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மனிதநேய அடிப்படையில் உதவி செய்வதற்கு வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளன.
இத்தகவலை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதப் சவுத்ரி மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக