புதன், 24 அக்டோபர், 2012

கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி: கழக வழக்குரைஞர் தலையீட்டால் நிறுத்தம்

கோயில் கோபுரத்தில் ஒலி பெருக்கிக் கட்டி சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டதை எதிர்த்து கழக வழக் குரைஞர் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.
கரூரில் உள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான் தோன்றி மலையில் உள்ள வெங் கட்ரமணர் கோயிலில் சனிக் கிழமையன்று கூட்டம் அதிகம் காணப்படும். தான்தோன்றிமலை கரூர் நகராட்சியோடு சேர்க்கப் பட்டதால் பெரு நகராட்சியாக உள்ளது.
இங்கு கோயிலை சுற்றி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி என மாணவர்கள் படிக்கக் கூடிய கல்விக் கூடங்கள் என அதிகம் உள்ளன.
தான்தோன்றி மலையில் உச்சியில் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தில் அதிகாலை 4 மணிக்கே கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் சுப்ரபாதம் மற்றும் பஜனைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
இதனால் அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் பொது மக்கள் மற்றும் வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள். அருகில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகள் என அதிகம் பேர் பாதிப்பு அடைகின்றார். தேர்வுக் காலங்கள் மற்றும் காலை நேரங்களில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
பொது மக்கள் பலமுறை கோயில் நிர் வாகத்திடம் ஒலி அளவை குறைக்கச் சொல்லியும்  அவர்கள் அதைப் பொருட் படுத்தவில்லை.

கழக வழக் குரைஞரும், பகுத் தறிவு சிந்தனை யாளருமான இரா. குடியரசு அவர்கள் பொது மக்கள் புகாரையும் கோயில் அருகே வசிக்கும் அவர்தம் மகள் படிப்பு பாதிக்கும் வகையில் செயல்பட்ட கோயில் அறங் காவலர்க்கு  கோயில் கோபுரத்தில் விதிமுறை களுக்கு மாறாக நான்கு பக்கங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் அரசு விதி களுக்கு உட்பட்டு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்து வழக் குரைஞர் கடிதம் அனுப் பினார்.

அதன் பிறகு இப்போது சுப்ரபாதமோ, பாடல்களோ ஒலி பரப்பு செய்வதில்லை, இதனால் கோபமடைந்த இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய் தன. காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வழக்குரைஞர் குடியர சுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக