வியாழன், 18 அக்டோபர், 2012

அனிருத் பிறந்தநாள் விருந்தை ஆண்ட்ரியா புறக்கணித்தார்

 இசையமைப்பாளர் அனிருத் அளித்த பிறந்தநாள் விருந்தை நடிகை ஆண்ட்ரியா புறக்கணித்துள்ள சம்பவம்தான் இன்றைக்கு கோலிவுட் உலகில் ஹாட் டாபிக் ஆக பேசப்படுகிறது.
தனுசின் ‘3' படத்துக்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற ‘கொலை வெறி' பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
andrea boycotts aniruth party
அதை எல்லாம் விட அனிருத்தும் ஆண்ட்ரீயாவும் நெருக்கமாக உதட்டுடன் உதடு முத்தமிடும் படங்கள் இணையதளத்தில் வெளியானதால் உலகம் முழுவதும் இருவரின் புகழ் பரவியது.
இத்தனைக்கும் அனிருத்தைவிட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். விருந்து நிகழ்ச்சியொன்றில் சக நடிகர் ஒருவர் இந்த முத்த காட்சி படங்களை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது.
இருவரும் இதனை மறுக்கவில்லை. முத்தகாட்சி படங்கள் வெளியானதால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இது உண்மைதான் என்று இருவரும் ஒத்துக்கொண்டனர்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் அனிருத் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் நெருங்கிய நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஜெய், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா, லட்சுமி மஞ்சு, சவுந்தர்யா, சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்களும் பங்கேற்றார்கள். அனிருத் ‘கேக்' வெட்டினர். பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முத்தகாட்சி படங்கள் வெளியானதால் அனிருத் மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக