செவ்வாய், 23 அக்டோபர், 2012

கத்காரிக்கு சொந்தமான நிறுவன முகவரிகள் எல்லாமே போலி

மும்பை: பாஜக தலைவர் நிதின் கத்காரி மீது கெஜ்ரிவால் புகார் கூறியதுதான் தாமதம்! இப்பொழுது அனைத்து ஊடகங்களும் கத்காரியின் பலே டுப்பாக்கூர்தனங்களைப் புட்டு வைக்கத் தொடங்கியிருக்கிறது.
'Purti group' என்பது நிதின் கத்காரிக்குச் சொந்தமான நிறுவனம். இதில் முதன்மை பங்குதாரர்களாக 3 நிறுவனங்களின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மும்பையில் உள்ள ஹசரிமால் சோமனி மார்க் பகுதியில் 2-வது தளத்தில் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி எந்த ஒரு நிறுவனமும் இந்த முகவரியில் இயங்கவே இல்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. ஆனால் குஜராத் காம்போசைட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த முகவரியில் இயங்குகிறது. இந்த நிறுவனம்தான் மேற்படி நிறுவனங்கள் தங்களது முகவரியை பயன்படுத்த அனுமதி கொடுத்திருக்கிறது.

இதேபோல் நிதின் கத்காரியின் காரோட்டியை 6 நிறுவனங்களுக்கு இயக்குநராக்கி வைத்திருக்கிறார்கள். கத்காரியின் மகனின் நண்பர்கள் கூட இப்படி டைரக்டர்களாக்கப்பட்டிருக்கின்றனர்.
சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ராவுக்கும் டி.எல்.எப்; நிறுவனத்துக்கும் என்ன உறவு என்று குடைந்தெடுக்கப்படும் கேள்விகள் கத்காரி விவகாரத்திலும் அலையடிக்கிறது. டி.எல்.எப். போலவே ஐஆர்பி என்ற கட்டுமான நிறுவனம் பெருந்தொகையை கடனாக கத்காரி தொடர்புடைய குழுமத்துக்கு கொடுத்திருக்கிறது... முதலீடு செய்திருக்கிறது...இந்த நிறுவனத்தின் பல பங்குதாரர்களும் கத்காரிக்கு இந்தக் கை ..அந்தக் கையாக இருப்பவர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக