திங்கள், 15 அக்டோபர், 2012

பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆட்டம் முடிந்தது

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிர்ப்பு!  தலிபான் சுட்ட மாணவி சிறப்பு விமானத்தில் பிரிட்டனுக்கு viruviruppu.com

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்ததால், தலிபான் அமைப்பினரால் சுடப்பட்ட 14 வயது மாணவி மலாலா யூசஃப்சாய், மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டனுன்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரை ஏற்றிக்கொண்டு சிறப்பு air ambulance விமானம் இன்று பிரிட்டனுக்கு புறப்பட்டு சென்றது.
ஐக்கிய அரபு எமிரேஸ் அரசினால் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தூதுக்குழு, இந்த சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
குழந்தைகள் வைத்திய சிகிச்சைகளில் உலகப் புகழ்பெற்ற வைத்தியசாலை, பர்மிங்ஹாம் நகரில் உள்ளது. பர்மிங்ஹாம் குவீன் எலிசபெத் ஹாஸ்பிடலில், அந்த பாகிஸ்தான் மாணவிக்கு அவசர மருத்துவ சிக்ச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிகிச்சைக்கான செலவுகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்கிறது.

இந்த சம்பவம், பாகிஸ்தானில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிய நகரங்கள் அனைத்திலும், தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகள் விதிவிலக்காக, மக்கள் தலிபான்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், மாணவி உயிர் பிழைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை காலமும் பாகிஸ்தானில் காணப்பட்டிராத ஒரு மிகப் பெரிய எழுச்சியை, இந்த மாணவி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், தலைபான்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டுள்ளது.
தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இஸ்லாமியச் சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்பவர் யாராக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், கொல்லப்படுவதை தடுக்க முடியாது. தற்போது சுடப்பட்ட மாணவி மலாலா யூசஃப்சாய் உயிர் பிழைத்தால், அவர் மீண்டும் சுட்டுக் கொல்லப்படுவார்” என்று தெரிவித்துள்ளது.
கீழேயுள்ள சில போட்டோக்களில், பாகிஸ்தானின் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு தரப்பினர் இந்த விவகாரத்தில் ரியாக்ட் செய்த போட்டோக்கள் உள்ளன. எப்படியான எழுச்சி அங்கு ஏற்பட்டுள்ளது என்பதை, ஒவ்வொரு போட்டோவிலும் பாருங்கள்.
முதலாவது போட்டோவில், ஆயிரக் கணக்கான மக்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் கூடி, தலிபான்களால் மாணவி மலாலா சுடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்த காட்சி.
 பாகிஸ்தான் அரசியல் கட்சியான முதாஹிடா குவாமி அமைப்பு, தலிபான்களால் மாணவி மலாலா சுடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
மின்கோரா நகரில் உள்ள பாடசாலை ஒன்றில், தலிபான்களால் சுடப்பட்ட மாணவி உயிர் பிழைக்க வேண்டும் என்று, மாணவ, மாணவிகள் பிரார்த்தனை செய்யும் காட்சி.
 காட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக