திங்கள், 29 அக்டோபர், 2012

சிம்பு, பிரபுதேவாவை நயனதாரா பிரிய 'வசிய' ராஜ்தான் காரணமா...?

 சென்னை: உலகம் உருண்டை என்பார்கள். இது நயன்தாரா விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. தற்போது அவரது காதல் பிரிவுகளுக்குக் காரணம் வசியராஜ் என்பவர்தான் காரணம் என்று இப்போது புது டாக் ஒன்று கிளம்பியுள்ளது.
சிம்புவில் ஆரம்பித்த காதல் பயணம் தனுஷ், விஷால், பிரபுதேவா, ஆர்யா என்று மாறி இப்போது மீண்டும் சிம்புவிடமே வந்திருக்கிறதாம்.
காதலர்கள் மாறினாலும் நயன்தாராவின் மேக்அப் மேன் மட்டும் மாறவே இல்லையாம். ஐயா படத்தில் தொடங்கி இன்றுவரை ராஜ் என்பவர்தான் நயனின் மேக் அப் மேனாக இருக்கிறாராம். இவருடைய கையிலும், காலிலும் கேரள மாந்திரீகவாதிகள் மந்திரித்து கொடுத்த வசிய தாயத்துகளும், கயிறுகளும் இருப்பதால்தான் இவருக்கு வசியராஜ் என்ற பட்டப்பெயரும் உண்டாம். இவர் என்ன சொன்னாலும் தட்டமாட்டராம் நயன்தாரா. http://tamil.oneindia.in/


ஐயா படப்பிடிப்பு நடக்கும் போது பெற்றோருடன்தான் சூட்டிங்கிற்கு வருவார் நயன்தாரா. ராஜ் வருகைக்குப் பின்னர் பெற்றோரை கட் செய்துவிட்டார் நயன்தாரா. நயன்தாரா தன் சொல்பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகவே வசிய தாயத்தை கட்டிக்கொண்டாராம் மேக்அப் மேன் ராஜ்.
சிம்பு முதல் ஆர்யா வரை நெருக்கமாக பழக வைத்ததும், பின்னர் உறவு முறிந்து போனதும் இவரது கைங்கரியம்தானாம்
படப்பிடிப்பு நேரத்தில் மேக் அப் செய்துவிட்டு சூட்டிங் முடிந்த உடன் வீட்டிற்கு சென்றுவிடுவது மேக்அப் மேனின் வேலை. ஆனால் 24 மணிநேரமும் நயன்தாரா உடன் இருக்கிறார் ராஜூ
நயனின் அனைத்து பெர்சனல் விசயத்திலும் தலையிட்டு முடிவு எடுப்பது ராஜூதான். எதற்கெடுத்தாலும் கோபப்படும் நயன் ராஜூ விசயத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிபோய்விடுவாராம். ராஜூ சொன்னால் மறுபேச்சு கிடையாதாம்.
பிரபுதேவாவை விட்டு பிரிந்த பின்னர் ராஜூ மூலம்தான் நயன்தாராவுக்கு தூதுவிட்டாராம் சிம்பு. மீண்டும் இவர்களின் நட்பு துளிர்க்க காரணமாக இருப்பவர் முன்பு இவர்களை பிரித்த அதே ராஜூதான். ஆனால் இதுவரை இப்படி ஒரு கேரக்டர் நயன்தாரா வாழ்க்கையில் இருக்கிறார் என்பதே அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு சீனுக்கே வராதவர் இந்த வசியராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக