வெள்ளி, 5 அக்டோபர், 2012

மதம் மாற வலியுறுத்துவதும் குற்றமாகும்

      
இந்நிலையில் மதம் மாற்றிச்சொல்லி காஞ்சனாவை திருமணம் செய்துகொண்டதும், தற்போது காஞ்சனாவை மதம் மாற வலியுறுத்துவதும் குற்றமாகும். 100 பவுன் நகை மற்றும் ரூ. 25 லட்சத்துடன் மனைவி மற்றும் மகனை தவிக்கவிட்டு தலைமறைவாக உள்ள கணவரை கண்டுபிடிக்க வேண்டுமென 2 மாதத்துக்கும் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆலங்குடியில் கடந்த 1 வாரமாக இப்ராம்ஷா வீ்ட்டில் காஞ்சனா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.  அப்போதும் காவல் துறை நடவடிக்கை இல்லை. உடல்நிலை மோசமான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு அதாவது, சில நாள்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துவிட்டு,  இங்கிருக்கக்கூடாது என காஞ்சனாவை டிஎஸ்பி ஏ.சி. செல்லபாண்டியன் மிரட்டியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க காலம்தாழ்த்தியும், நான்வருகிறேன் என்பதற்காக இங்கிருந்த காஞ்சனாவைவெளியேறவும் மிரட்டிய டிஎஸ்பி-க்கும், இப்ராம்ஜாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை உணரமுடிகிறது.
சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் மிரட்டும் செயலில் ஈடுபட்டிருப்பதால் டிஎஸ்பி மீது துறைமூலமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக