திங்கள், 1 அக்டோபர், 2012

துரை தயாநிதியின் பள்ளிக்கூட தோழரைப் பிடித்து போலீஸ் விசாரணை

 மதுரையை உலுக்கிய கிரானைட் ஊழல் விவகாரத்தில் தீவிரமாக தேடப்பட்டு வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கிரானைட் ஊழல் விவகாரத்தில் துரை தயாநிதியின் பெயரையும் போலீஸார் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடியாகி விட்டது.
இந்த நிலையில், துரையைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார், அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து லிஸ்ட் போட்டு ஒவ்வொருவராக அணுகி வருகின்றனர்.

அந்த வகையில் மகேஷ் என்பவரை இன்று மதுரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இவர் திருவாரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு அழகிரி தலைமையில்தான் பரமக்குடியில் திருமணம் நடந்தது. அவருக்கு நிச்சயம் துரை தயாநிதியின் மறைவிடம் தெரிந்திருக்கும் என்று போலீஸார் நம்புவதால் அவரை விசாரணைக்கு கூட்டிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக