ஞாயிறு, 28 அக்டோபர், 2012

22 பேர் புதிய அமைச்சர்களாகியுள்ளனர்.மத்திய அமைச்சரவை மாற்றம்

டெல்லி:  மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று நடந்தது. சிரஞ்சீவி உள்ளிட்ட 22 பேர் புதிய அமைச்சர்களாகியுள்ளனர். சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் வெளியுறவுத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றத்துக்காக மொத்தம் 7அமைச்சர்கள் ராஜினாமா செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு செய்து வைத்தார்.
கேபினட் அமைச்சர்களாக 7 பேரும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக இருவரும் இணை அமைச்சர்களாக 13 பேரும் பொறுப்பேற்றுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் எம்.பி. ரகுமான்கான் முதலில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தின்ஷா பட்டேல், அஜய் மகான், அஷ்வணி குமார், சூரிய பிரகாஷ், தாரிக் அன்வர், நடிகர் சிரஞ்சீவி, மணிஷ் திவாரி, பல்லம் ராஜூ உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
மொத்தம் 22 பேர் இன்று புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
சல்மான் குர்ஷித் வெளியுறவு அமைச்சர்
இதேபோல சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் பெரும் ஊழல் புகாருக்குள்ளானவர் என்பது நினைவிருக்கலாம். எஸ்.எம்.கிருஷ்ணா விட்டுச் சென்ற முக்கியமான வெளியுறவுத்துறைக்கு இவர் மாற்றப்பட்டிருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல வீரப்ப மொய்லியிடம், பெட்ரோலியத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.


புதிய கேபினட் அமைச்சர்களும் அவர்களது துறையும்:
1. ரகுமான்கான் - சிறுபான்மையினர் விவகாரத் துறை
2. தின்ஷா படேல் - சுரங்கத் துறை
3. அஜய் மக்கான் - வீடு மற்றும் நகர்ப்புறத் துறை

4. பல்லம் ராஜூ - மனித வள மேம்பாட்டுத் துறை
5. அஷ்வினி குமார் - சட்டம் மற்றும் நீதித் துறை
6. ஹரீஷ் ராவத்- நீர்வள ஆதாரத்துறை
7. சந்திரேஷ் குமாரி கடோஜ் - பண்பாட்டுத் துறை
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:
1. மணிஷ் திவாரி- தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை
2. சிரஞ்சீவி - சுற்றுலாத் துறை
இணை அமைச்சர்கள்
1. சசி தரூர் - மனித வளமேம்பாட்டுத் துறை
2. குனில் சுரேஷ் - தொழிலாளர் நலத்துறை
3. தாரிக் அன்வர் -வேளாண் துறை
4. ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி - ரயில்வே துறை
5. ராணி நாரா- பழங்குடி நலன் துறை
6. அதிர் ரஞ்சன் செளத்ரி - ரயில்வே துறை

7. ஏ.கே.கான் செளத்ரி- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
8. சத்யநாராயணா - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
9. நினாங் எரிங் - சிறுபான்மை நலன்
10. பல்ராம் நாயக் - சமூக நீதி
11.தீபா முன்ஷி - நகர மேம்பாடு
12. கிருபாராணி - தகவல் தொழில்நுட்பம்
13. லால்சந்த் கட்டாரியா- பாதுகாப்பு

சல்மான் குர்ஷித் வெளியுறவு அமைச்சர்- மொய்லிக்கு பெட்ரோலியம்!
இதேபோல சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் பெரும் ஊழல் புகாருக்குள்ளானவர் என்பது நினைவிருக்கலாம். எஸ்.எம்.கிருஷ்ணா விட்டுச் சென்ற முக்கியமான வெளியுறவுத்துறைக்கு இவர் மாற்றப்பட்டிருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வீரப்ப மொய்லியிடம், பெட்ரோலியத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கேபினட் அமைச்சர்களாக இருந்தவர்களின் மாற்றப்பட்ட துறைகள்:
1. வீரப்ப மொய்லி - பெட்ரோலியத் துறை
2. ஜெய்பால் ரெட்டி - அறிவியல் தொழில்நுட்பம்
3. கமல்நாத் - நாடாளுமன்ற விவகாரத்துறை
4. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம்
5. கபில் சிபல் - தகவல் தொடர்பு
6. சி.பி. ஜோஷி - சாலைப் போக்குவரத்து
7. குமாரி செல்ஜா - சமூக நீதி
8. பவன்குமார் பன்சால் - ரயில்வே
9. சல்மான் குர்ஷித்- வெளியுறவுத் துறை
10. ஜெய்ராம் ரமேஷ் - ஊரக மேம்பாடு
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:
1. ஜோதிராதியா மாதராவ் சிந்தா - மின்சாரத்துறை
2. ஹெச்.எம். முனியப்பா - சிறு மற்றும் குறு தொழில்
3. பரத்சிங் மாதவ்சிங் சோலங்கி - குடிநீர் துறை
4. சச்சின் பைலட் - கம்பெனிகள் விவகாரம்
5. ஜிதேந்திர சிங் - இளைஞர் நலன்

இணை அமைச்சர்கள்:
1. ஈ. அகமது - வெளியுறவுத் துறை
2. புரந்தேஸ்வரி - தொழில் மற்றும் வர்த்தகம்
3. ஜிதின் பிரசாதா - பாதுகாப்பு மற்றும் மனித வள மேம்பாட்
4. ஜெகத்ரட்சகன் - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
5. ஆர்.பி.என்.சிங் -உள்துறை
6. கே.சி. வேணுகோபால் - விமானப் போக்குவரத்து
7. ராஜீவ் சுக்லா- நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்டமிடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக