சனி, 6 அக்டோபர், 2012

English Vinglish தமிழ்நாட்டில் 170 தியேட்டரில் ரிலீஸ்

ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்குப்பின்னர் நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 170 தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இது சல்மான்கான் நடிப்பில் வெளியான ஏக்தா டைகர் படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஏக் தா டைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் ஆனது. இது தமிழ்நாட்டில் 50 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் 20 தியேட்டர்களில் வெளியாகி கணிசமான அளவிற்கு வசூல் செய்தது
தற்போது ஸ்ரீதேவி நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் தமிழில் ‘ஆங்கிலம், வாங்கிலம்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் அஜீத் நடித்திருக்கிறார்.
ஸ்ரீதேவி நீண்டநாள் கழித்து நடித்த படம் என்பதாலும், அஜீத் நடித்திருக்கிறார் என்பதாலும் விநியோகஸ்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 170 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
ஏக் தா டைகர் திரைப்படம் முதன்முறையாக 1 கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் வசூல் செய்து சாதனைபடைத்தது. இதனை முறியடிக்கும் வகையில் ஸ்ரீதேவியின் திரைப்படம் இருக்குமா? வசூலில் சாதனை படைக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக