புதன், 3 அக்டோபர், 2012

10 மணி நேர விசாரணைக்கு பின்பு மு.க.அழகிரி மருமகன் விடுவிப்பு

பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர் மு.க.அழகிரி மருமகன் விடுவிக்கப்பட்டார்.மதுரையில் கிரானைட் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில், கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் துரை தயாநிதி குறித்து, அவரது நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மு.க.அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேசனிடம், துரைதயாநிதி குறித்து மதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னையில் இருந்த அவரை மதுரை தனிப்படை போலீசார் மதுரை அழைத்து வந்தனர். அவரை இன்று  (02.10.2012) காலை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் ஏஎஸ்பி மயில்வாகணன் தலைமை யில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 10 மணி நேர விசாரணைக்கு பின்னர்  இன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக