வெள்ளி, 21 செப்டம்பர், 2012

TATA வுக்கு கிடைத்த Huge ஆர்டர் 1314 டிரக்குகள்

ஒரே ஆர்டரில் 1314 சப்ளை செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பல்க் ஆர்டர் கிடைத்திருக்கிறது நாட்டின் மிகப் பெரிய வாகன தயராப்பு நிறுவனமான டாடாவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்க் ஆர்டர் கிடைத்து வருகிறது. அந்த வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு 1314 டிரக்குகளை சப்ளை செய்யும் விதமாக புதிய பல்க் ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சித்தி விநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நவீன ரக பிரைமா 4923எல்எக்ஸ் மற்றும் டாடா எல்பிடி 3723 ஆகிய மாடல் டிரக்குகளுக்கு இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,"ரூ.225 கோடி மதிப்புக்கு இந்த ஆர்டர் கிடைத்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டிற்குள் டிரக்குகளை டெலிவிரி கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம்," என்றார்.
சித்திக் விநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் தற்போது 4,000 வாகனங்கள் இருக்கின்றன. நாட்டின் முன்னணி சரக்கு போக்குவரத்து நிறுவனமான சித்தி விநாயக் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டீல், சிமென்ட், டிராக்டர், கெமிக்கல் மற்றும் எந்திரங்களை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக