ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

Surkshetra மிரட்டலை மீறி பாகிஸ்தானியர் பங்குபற்றிய TV Show

Viruvirupu
இந்திய பாகிஸ்தானிய கலைஞர்கள் பங்குபெறும் ‘சுர் ஷேத்திரா’ எனப் பெயரிடப்பட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று விடுக்கப்பட்ட மிரட்டல்களை மீறி,


 நிகழ்ச்சியின் 1-வது எபிசோட் ஒளிபரப்பானது. பாகிஸ்தானியர் பங்குபற்றிய 
கலர்ஸ் டி.வி. மற்றும் சஹாரா ஒன் தொலைக்காட்சி நிறுவனங்கள் நேற்று முதல் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக அறிவித்திருந்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் 15 பேர், அந்தேரி பகுதியில் உள்ள கலர்ஸ் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் சிறிது நேரத்தில், ஸ்வராஜ் சேனா கட்சியினர் விலே பார்லே பகுதியில் உள்ள கலர் தொலைக்காட்சி அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 8 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘இசைக்கு எல்லைகள் கிடையாது’ என்ற தீம் உடைய சுர் ஷேத்திரா ரியாலிட்டி ஷோ, பாகிஸ்தான் மற்றும் இந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய இசைக் கலைஞர்கள் 8 பேர் கொண்ட ஒரு குழுவினர், இந்திய கலைஞர்கள் 8 பேர் கொண்ட குழுவினருடன் வாய்ப்பாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது.
நடுவராக இந்தியாவின் சார்பில் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, பாகிஸ்தான் சார்பில், அபிதா பர்வீர் ஆகியோருடன் பங்களாதேஷை சேர்ந்த ருணா லைலா ஆகியார் நியமிக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானியர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் கடுமையான விளைவுகளை சந்திக்கக்கூடும் என்று மகாராஷ்ட்ரா நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர் போனி கபூரின் வேண்டுகோளை ஏற்று அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, “‘அதிதி தேவோ பவ’ (விருந்தாளி கடவுளுக்கு சமம்) என்பதை உலகுக்கு காட்டிவிட்ட இந்திய ரசிகர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஷா போஸ்லே தஞ்சை மாவட்டம் பூண்டி பக்கம் வந்திருந்தால், நம்மாளுங்க அக்கினியில் ‘அதிதி’ காமிச்சிருப்பாங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக