வியாழன், 6 செப்டம்பர், 2012

கல்லூரி ராகிங் Sub Inspector மகன் கேங் லீடர் டிஸ்மிஸ்-

 சென்னை மேடவாக்கம் அருகே உள்ள பொன்மாரில் பிரின்ஸ் டாக்டர் வாசுதேவன் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 3-ம் ஆண்டு மாணவன் விஜித் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். அவனது கூட்டாளிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஜித் தலைமையில் அசாருதீன், பார்த்தசாரதி, வாசுதேவன், முத்துக்கிஷ்ணன், அசிம்முகமது அபீஸ் ஆகிய மாணவர்கள் கும்பலாக சேர்ந்து கல்லூரியில் ராக்கிங் செய்து வந்தனர். கடந்த வாரம் முதலாமாண்டு மாணவன் அஸ்வின் ராஜை ராக்கிங் செய்திருக்கின்றனர். ஆனால் அஸ்வின்ராஜ் உடன்படாததால் விஜி தலைமையிலான கும்பல் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. இதைப் பார்த்த பேராசிரியர்கள் அஸ்வின்ராஜை காப்பாற்றினர்.
இது தொடர்பாக கல்லூரியின் ராக்கிங் தடுப்புக் குழு விசாரணை நடத்தியது. ராகிங் கோஸ்டிக்கு தலைமை வகித்த விஜி, தேனாம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வில்சனின் மகன். இதைத் தொடர்ந்து வில்சனை கல்லூரி நிர்வாகம் அழைத்தது. ஆனால் தனது மகன் அப்படி செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

இது பற்றி அண்ணா பல்கலைக் கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராகிங் கும்பலுக்கு தலைமை வகித்த விஜி கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யபட்டான். மற்ற 5 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தால் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக