வியாழன், 6 செப்டம்பர், 2012

7,000 கோடி கடன், வங்கிகளை மல்லையா படுத்தும் பாடு!


 Kingfisher Airlines Lenders Demand Mallya Presence
மும்பை: கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ. 7,000 கோடி வரை கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் அதைத் திரும்ப வசூலிப்பது குறித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.
அவருக்குக் கடன் கொடுத்துள்ள பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பு போல அமைத்து, கடனை திரும்ப வசூலிப்பது குறித்து பேச்சு நடத்தி வருகின்றன. இதில் விஜய் மல்லையா அதிகமாக கலந்து கொள்வது இல்லை. அவரது நிறுவன அதிகாரிகளும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுகளும் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
இவர்களால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடிவதுமில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இதுவரை எந்த பலனும் வங்கிகளுக்கு இல்லை. நாட்கள் தான் கடந்து வருகின்றன. (இந் நிலையில் வங்கிகளின் இன்றைய கூட்டத்துக்கும் மல்லையா வரவில்லை. அவர் வெளிநாட்டில் பயணத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் இந்தக் கூட்டம் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்)
மல்லையாவின் இந்த ஐடியாவை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்டுவிட்ட வங்கிகள், இப்போது அவரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கூறியுள்ளன.

இப்போதைக்கு மல்லையாவிடம் இருந்து பணத்தைத் திருப்பி வாங்குவது கஷ்டம் என்பதால், இந்தக் கடன்களுக்கு ஈடாக மேலும் சொத்துக்களையும் ஜாமீன்களையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வருகின்றன.
மேலும் இந்த மாத இறுதியில் மல்லையாவே வங்கிகளின் கூட்டத்துக்கு வந்து, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரூ. 7,000 கோடி கடன் தவிர, கிங்பிஷரில் 20 சதவீத பங்குகளிலும் இந்த வங்கிகள் இன்னொரு ரூ. 1,000 கோடியையும் முதலீடு செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான் மிக அதிகமாக ரூ. 1,400 கோடியை மல்லையாவுக்கு அள்ளித் தந்ததாகும். பஞ்சாப் நேஷனல் பேக்ங் ரூ. 700 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ. 500 கோடியையும் தந்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக