ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இந்தியாவில் Rolls Roys Phantom11 ஆடம்பர கார் அறிமுகம்

 4.6 கோடி விலை
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய பான்டம்-II ஆடம்பர காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.
சாமானியனுக்கு சான்ட்ரோ கனவென்றால், கோடீஸ்வரர்களுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்தான் கனவு. மார்க்கெட்டில் கோடிகளில் விலை கொண்ட எத்தனையோ கார்கள் இருந்தாலும் ரோல்ஸ்ராய்ஸ் மீதுதான் அவர்களுக்கு கனவு. அந்தளவுக்கு மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்து வரும் ரோல்ஸ்ராய்ஸ் நி்றுவனம் கார்களுக்கு அவ்வப்போது வாடிக்கையாளர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்த தவறுவதில்லை.

பான்டம் காரின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய காரை ரோல்ஸ்ராய்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பான்டம்-II என்ற பெயரில் வந்திருக்கும் இந்த காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள், ஆடம்பர அம்சங்களுக்கு பஞ்சமில்லை.எல்இடி ஹெட்லைட், டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பங்கள், ஜிபிஎஸ் வசதி, முன்புறம் பின்புறம் கேமராக்கள் என அதிக தொழில்நுட்பங்களுடன் வந்திருக்கிறது பான்டம்-II. இந்த காரில் 460 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார் 5.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் ஆற்றல் படைத்தது.
இந்த புதிய பான்டம் 2 காரின் விலை விபரங்களை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிடவில்லை என்றாலும், ரூ.4.6 கோடி விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. டெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்கள் மூலமாக இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக