ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தல்

இலங்கையில் இருந்து விமானம் மூலம்
சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தல்வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தெற்கு மண்டல மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் விமலா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமலக் கண்ணன் மற்றும் போலீசார் விமான நிலையம் அருகே தீவிர தணிக்கை செய்தனர்.>அப்போது 21 பெரிய பைகளுடன் வந்த 2 பயணிகளை சந்தேகத்தில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து மதுபாட்டில்களை விமானத்தில் கடந்தி வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள 58 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை கடத்தி வந்த கொழும்புவை சேர்ந்த வியாபாரிகள் பிரேம் ஆனந்த் (41), திலிப்குமார் (33) இருவரையும் கைது செய்தனர்.
;மதுபாட்டில்களை பர்மா பஜாருக்கு கடத்தி வந்து விற்று விட்டு இங்கிருந்து இலங்கைக்கு அழகு சாதாரன பொருட்கள் வாங்கி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் பலர் ஈடுபட்டு இருப்பதாக பிடிபட்ட இருவரும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக