ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வளர்த்தி குமார் கோடி கோடியாக,,Polymar TV அதிபரையும் இவர்தான் கடத்தினார்

சேலத்தில் அரசியல் கட்சியினர், போலீஸ் அதிகாரிகளால், வளர்த்து விடப்பட்ட வளர்த்தி குமார், தொழில் அதிபர்களையும், முக்கிய பிரமுகர்களையும் மிரட்டி, பணம் பறித்துள்ளார். ரேஷன் அரிசி கடத்தலில், கொடி கட்டிப் பறந்தவர், கோடிகளை அள்ளிக் குவித்துள்ளார். அவரின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என, சேலம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் பரசிவம். இவர் மகன் வளத்தி குமார், 42. இவர், 1995ல், வயிற்றுப் பிழைப்புக்காக, லாரிகளில் வரும் பொருட்களைத் திருடி, விற்பனை செய்து வந்தார். நல்ல வருவாய் கிடைக்கவே, அதை தொழிலாக பின்பற்றத் துவங்கினார்.தொடர்ந்து, சேலம் மாநகரில், கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என, பல்வேறு அராஜகச் செயல்களில் இறங்கினார். தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் மகன் ராஜா ஆகியோரின் ஆதரவும் கிடைத்தது.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வளத்தி குமார், அவர்கள் பெயரைப் பயன்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டார். வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவு இவருக்கு இருப்பது தெரிய வந்ததால், போலீஸ் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல், அவரின் செயல்களுக்கு துணை போனது, அங்கீகாரம் வழங்குவது போல் அமைந்தது.சேலம் மாநகரில் தொழிலதிபர்கள், வியாபார பிரமுகர்களைக் கடத்தி, அவர்களுடன், இளம் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து, படம் எடுத்து, அதை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடத் துவங்கினார்.

இவரின் இந்த ஆள் கடத்தலில் சிக்கிய, முதல் பிரபலம், "பாலிமர்' சேனலின் உரிமையாளர் கல்யாண சுந்தரம். 2006ம் ஆண்டு, கல்யாண சுந்தரத்தை காரில் கடத்திய வளத்தி குமார், அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு மில்லில் அடைத்து, பணம் பறிக்கும் வகையில், மிரட்டல் விடுத்து வந்தார்.
இந்த பிரச்னையில், வீரபாண்டி ஆறுமுகம் தலையிட்டதன் காரணமாக, கல்யாண சுந்தரம் விடுவிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த கண்ணனை, ஏற்காட்டுக்குக் கடத்திச் சென்று, அவருடன் இளம் பெண்களை, நிர்வாணமாக நிறுத்தி படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்ததோடு, அவர் சொத்துகளையும் பறித்துக் கொண்டார்.ஆட்களை கடத்தி பணம் பறிக்கும் செயலில், கோடி கோடியாய் குவித்ததை அடுத்து, ரேஷன் அரிசி கடத்தலுக்குத் தாவினார்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், அரிசி கடத்தலில், கொடிகட்டிப் பறக்கத் துவங்கினார். இவர், உயர் அதிகாரிகளுக்குத் தேவையான, "அனைத்தையும்' செய்து கொடுத்ததால், அவர்களே இவரை வளர்த்து விட்டனர்.கடந்த, 1997ல் துவங்கி, இது வரை, இவர் மீது, 27 வழக்குகள் பதிவாகி உள்ளன.இதில், ஒரு கொலை, மூன்று கொலை முயற்சி, ஐந்து ஆள் கடத்தல், ஐந்து ரேஷன் அரிசி கடத்தல், மூன்று வழிப்பறி, நான்கு அடிதடி, ஒரு திருட்டு, ஐந்து சந்தேக வழக்குகள் என, பட்டியல் நீள்கிறது.இதில், ஒரு வழக்கில் மட்டுமே, வளத்தி குமாருக்கு தண்டணை கிடைத்துள்ளது. நான்கு வழக்குகள்,ஆர்.டி.ஓ., விசாரணையில் தள்ளுபடியும், 11 வழக்கில் விடுதலையும் செய்யப்பட்டுள்ளாõர். தற்போது, இவர் மீது, 10 வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவர் மீது போடப்பட்ட வழக்குகளில், பெரும்பாலானவை, தி.மு.க., ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகரில், சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்ட வளத்தி குமார், ஆறாவது முறையாக, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மொத்தத்தில், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளால் வளர்த்து விடப்பட்ட வளத்தி குமார், தற்போது சிறையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே, தன் கூட்டாளிகள் மூலம், பணம் பறிப்பு, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து வருகிறது.சேலம், அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டையை, தன் ரவுடியிசத்தின் மூலம், ஆட்டிப் படைக்கும் வளத்தி குமாருக்கு, போலீஸ் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்கின்றனர் சேலம் மக்கள். 6 குண்டாசில் 6 மாதம் கூட சிறையில் இல்லை:
வளர்த்தி குமாரை, 2002, அக்., 13; 2004, செப்., 15; 2006, அக்., 19; 2009, மார்ச் 26ல், மாநகர போலீசாரும், 2010, பிப்., 19ல், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ஆனால், இதில் ஒன்றில் கூட, வளத்தி குமார், ஆறு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்தது இல்லை. குண்டர் தடுப்புச் சட்ட கைது வழக்குகளில் இருந்து விடுதலை பெற, போலீஸ் அதிகாரிகள் பல வகையில் உதவி செய்ததால், இவர் எளிதாக வெளியில் வந்தார். தற்போது, ஆறாவது முறையாக, அன்னதானப்பட்டி போலீசார், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.


கோடி கோடியாக சொத்து:
வளத்தி குமார், சேலம் மாநகரதொழிலதிபர்களையும், வர்த்தகர்களையும் மிரட்டி பணம் பறித்ததோடு, ரேஷன் அரிசி கடத்தலிலும், கொடி கட்டிப் பறந்தார். இதனால், அவர் செல்வாக்கு, சேலம், கோவையில் மட்டுமின்றி ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் பரவியது.தற்போது, சேலம் மாநகரில், நான்கு இடங்களில் சொகுசு பங்களா, மூன்று வர்த்தக நிறுவனங்கள் என, கோடி கோடியாக சொத்து குவித்துள்ள வளத்தி குமார், அனைத்து சொத்துகளையும் தன் உறவினர், மனைவி, இரண்டு மகன்கள் பெயரில் வைத்துள்ளார்.


மகன் திருமணத்துக்கு பணம் பறிப்பு:
வளத்தி குமாரின் மூத்த மகனின் திருமணம், சில மாதங்களுக்கு முன், நெத்திமேடு, பெருமாயி அம்மாள் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவர் மகன் ராஜா கலந்து கொண்டனர்.இந்த திருமணச் செலவுக்காக, செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த, வட மாநில தொழிலதிபர் ஒருவரிடம், 30 லட்சம் ரூபாயை வளத்தி குமார் பறித்துக் கொண்டார். இந்த பணம் பறிப்பு விவகாரம், போலீசாருக்கு தெரிய வரவே, போலீசார், தொழிலதிபரிடம் புகார் அளிக்கும் படி கேட்டனர்.ஆனால், அவர் வளத்தி குமாருக்கு பயந்து, புகார் கொடுக்க முன் வராததால், போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக