ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

Ford தயாரித்த முதல் கார்: 109 ஆண்டுகள் பழமையானது ஏலத்திற்கு

ஃபோர்டு நிறுவனம் துவங்கியபோது தயாரிக்கப்பட்ட 109 ஆண்டுகள் பழமைவாய்ந்த விண்டேஜ் கார் ஏலத்திற்கு வந்துள்ளது. அடுத்த மாதம் 11ந் தேதி இந்த கார் ஏலம் விடப்படுகிறது.
கடந்த 1903ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் துவங்கப்பட்டது. அப்போது முதலவாதாக சேஸிஸ் 30 என்ற பெயரில் கார்களை தயாரித்தது. நிறுவனம் துவங்கப்பட்டு முதல் ஆண்டில் மொத்தம் 1750 சேஸிஸ் 30 கார்கள் தயாரிக்கப்பட்டன.
இதில், 5 சேஸிஸ் 30 கார்கள் மட்டுமே இப்போதும் விண்டேஜ் அந்தஸ்டுடன் இருக்கின்றன. அதில், ஃபோர்டு நிறுவனம் தயாரித்த முதல் கார் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பெனிசில்வேனியாவை சேர்ந்த ஏல நிறுவனமான ஆர்எம் ஏல நிறுவனம் இந்த காரை அடுத்த மாதம் 11ந் தேதி ஏலம் விடுகிறது.இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூறாண்டுகளை கடந்தும் இந்த கார் தற்போது இயங்கும் நிலை இருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு இந்த கார் புதுப்பிக்கப்பட்டது. இந்த காரில் 1668 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெறும் 8 பிஎச்பி திறனை மட்டுமே வெளிப்படுத்தும் என்பதோடு, அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக