செவ்வாய், 11 செப்டம்பர், 2012

அசீம் திரிவேதி கைது. நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து Cartoon

இந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வரைந்த கார்ட்டூன்களை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. கைது செய்தி கேட்டு இணையத்தில் தேடியதில், விக்கிபீடியாவில் இந்த இரண்டு கார்ட்டூன்களும் இருந்தன.
இப்படி கார்ட்டூன் போட்டதற்காகவெல்லாம் கைது செய்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒருவகையில் சட்டத்தை ‘டெஸ்ட்’ செய்யவேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கை வலுவான வக்கீல்கள் நடத்தி, வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த மாநில அரசை சந்தி சிரிக்கவைத்து, கடுமையான அபராதம் விதிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக