வெள்ளி, 28 செப்டம்பர், 2012

காவிரி நீர் திறக்காதது ஏன் ’- சுப்ரீம்கோர்ட் போட்டது உத்தரவு !

புதுடில்லி: காவிரிநதி நீர் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழகத்திற்கு தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் , மறுப்பது ஏன் ? என்றும் பிரதமர் உத்தரவை மதிக்காதது ஏன் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கர்நாடக அரசுக்கு சாட்டையடி கொடுத்தனர். இந்த உத்தரவு மூலம் தமிழகத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. கோர்ட் உத்தரவை தமிழக விவசாய மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டெல்டா விவசாய பணிகளுக்கு காவிரிநதியில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான நதிநீர் ஆணைய கூட்டம் பிரதமர் தலைமையில் கடந்த 19 ம் தேதி நடந்தது. கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் ஜெ., , கர்நாடகம், மற்றும் புதுச்சேரி தரப்பில் நீர்ப்பாசன துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் என பிரதமர் ஆணையிட்டார். ஆனால் கர்நாடகாவுக்கு மனது இல்லாமல் இருந்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு மற்றும் அனைத்துக்கட்சியினர் தரப்பில் வலியுறுத்தி மகஜர் அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடகாவில் பல கட்சியினர் போராட்டம் நடத்தினர்.



9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு :

இந்நிலையில் கர்நாடக அரசு போக்கிற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது . இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே., ஜெயின், மதுகோபூர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இன்று கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விசாரணையில் பிரதமர் போட்ட உத்தரவை மதிக்காதது கண்டத்திற்குரியது. இது தொடர்பான முழு விளக்கத்தை ஒரு வார காலத்திற்குள் அளிக்க வேண்டும். தமிழக நிலையை புரிந்து கொள்ள வேண்டாமா? உடனடியாக வினாடக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடவும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக