செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மாதா பக்தர்களிடம் வீரம் காட்டும் கோழைகள்

விடுதலைப் புலிகளுக்கு சிங்கள அரசு ஒரு முற்றுப் புள்ளி வைத்த பிறகு தமிழ் நாட்டில் திடீர் என்று தேர்தலுடன் தமிழ் பற்றும் வர தொடங்கியது.
அடையாள உண்ணாவிரதம், போராட்டம், மாநாடு என்று பலவிதங்களில் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று தினமும் யாராவது கிளம்புகிறார்கள். அப்பாவி மக்களுக்கு தலையில் கொத்தமல்லி மிளகாயை அரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
எல்லோரும் இதில் ஒற்றுமையாக இருப்பது வேடிக்கை!
இதன் விளைவாக நேற்று தமிழகத்தில் சிங்களர்களுக்கு எதிராக தஞ்சை அருகே மாதா ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த சிங்களர்களை வெளியேற்றகோரி பல்வேறு அமைப்புகள்(மதிமுக, வி.சிறுத்தைகள்) போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள், இல்லை பீச் பக்கம்  உண்ணாவிரதம் இருங்கள், இல்லை இலங்கை தூதரகம் முன் ஆர்பாட்டம் செய்யுங்கள் அதை விட்டுவிட்டு பொதுமக்களை விரட்டும் இந்த கோஷ்டியை என்ன செய்வது ? தமிழ்நாட்டிலிருந்து தினமும் இலங்கைக்கு பலர் போய் வருகிறார்கள், அவர்களின் கதி என்ன ஆகும் தேவை இல்லாத வம்பை விலைக்கொடுத்து வாங்குகிறார்கள் ? சில மாதங்களுக்கு முன் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது பொங்கி எழ இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? தமிழகம் இவ்வளவு தரம் தாழ்ந்ததை இது வரை சரித்திரம் காணவில்லை. இன்றும் கூட இலங்கையில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய பூர்வகுடி தமிழர்கள் மலைநாடுகளில் வாழ்கிறார்கள். இலங்கையில் கலவரம் வரவேண்டி தவம் இருக்கிறார்கள் இந்த ரவுடிகள் 
நிச்சயம் எல்லா அரசியல் பெரிய தலைவர்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்... ஆனால் செய்யமாட்டார்கள் http://idlyvadai.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக