ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சாருலதா சுத்த மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது!

சாருலதா, ஒட்டிப் பிறந்த இரட்டையரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அலோன் என்ற தாய்லாந்து மொழி படத்தின் ரீமேக். கன்னட மொழியில் சூப்பர் ஹிட் என்றாலும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியோடு 21-09-12 அன்று ரிலீஸானது சாருலதா. ஆவிகள் இருப்பதை நம்பினால் நம்புங்கள் என்ற படம் துவங்குவது ரசிகர்களை ’திடுக்’ காட்சிகளுக்கு தயாராக்குகிறது. 
பிரியாமணி, ஸ்கந்தா(ஹீரோ), சரண்யா பொன்வண்ணன், சீதா ஆகியோர் நடித்துள்ளனர். ஒட்டிப்பிறந்த இரு பெண்குழந்தைகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, எந்த நிலையிலும் 
ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்பன போன்ற சில உறுதியோடு வளர்கின்றனர். சாதுவான குணம் கொண்ட பிரியாமணி சாருவாகவும், முரட்டு குணம் கொண்ட பிரியாமணி லதாவாகவும் வளர்கின்றனர். 
இவர்களிடம் அறிமுகமாகும் கதாநாயகனிடம் முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார் லதா. ஆனாலும் சாருவை பிரிய நேர்ந்துவிடுமோ என தன் காதலை மறைத்து மறக்கிறார். இந்நிலையில் ஹீரோ சாதுவான குணம் கொண்ட சாருவை காதலிக்கிறார். சாருவும் காதலை ஒப்புக்கொள்ள, ‘உனக்காக நான் என் காதலை குழி தோண்டி புதைத்தால், நீங்கள் இருவரும் எனக்கா துரோகம் செய்கிறீர்கள்?’ என கோபத்தில் சாரு-லதா சண்டை போட்டுக் கொள்ள அந்த தகறாரில் சாரு இறந்துவிடுகிறார். இறந்த சாருவை பிரித்துவிட்டு ஹீரோவிடம் நான் தான் சாரு எனக்கூறி வேறு ஊருக்கு சென்று சாருவாக நிம்மதியாக 


வாழ்கிறார் லதா. சரண்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வர தன் வீட்டிற்கு சென்று, சரண்யாவை கவனித்துக்கொண்டு அங்கேயே தங்கியிருக்கும் லதாவை, சாருவின் ஆவி வந்து பழிவாங்குகிறது. 

இறந்த சாரு, லதாவை எப்படி டார்ச்சர் செய்கிறார் என்பதையும், இறந்து போனது லதா இல்லை சாரு தான் என்பது ஹீரோவுக்கு எப்படி தெரியவருகிறது என்பதையும் திக் திக் காட்சிகளுடன் மீதிக்கதையை விவரிக்கிறார் இயக்குனர்.  ஹீரோவுடனான காதல் காட்சிகளிலும், பாடல்களிலும் கவர்ச்சியாக நடித்திருக்கும் பிரியாமணியின் நடிப்பு பிரம்மாதம். ‘அட..’ என மெச்சும் விதத்தில் ‘ட்விஸ்ட்’ வைத்திருக்கிறார் இயக்குனர் பொன் குமரன். 

சாருலதா - சுத்த மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக