சனி, 8 செப்டம்பர், 2012

தமன்னா - .கோஹ்லியுடன் விளம்பரமொன்றில்


கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் நடிக்க உள்ளார் தமன்னா. இவர்கள் இருவரை பற்றிய கிசுகிசு கோலிவுட்டில் பரவியுள்ளது. 
 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் தங்களை இணைத்து பேசுவதை ஹீரோயின்கள் பெருமையாக கருதுகின்றனர். இதற்குமுன் டோனியுடன் லட்சுமிராய் மற்றும் பல்வேறு பாலிவுட் நடிகைகளும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டனர். தற்போது விராட் கோஹ்லியுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் தமன்னா. நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக கோஹ்லி நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே நிறுவனத்துக்கு ஆந்திராவில் தூதராக தமன்னா உள்ளார்.


இவர்கள் இருவரும் சேர்ந்து வர்த்தக விளம்பரமொன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டோலிவுட் இயக்குனர் த்ரி விக்ரம் இதனை இயக்க உள்ளார். இது பற்றி இயக்குனர் தரப்பில் கேட்டபோது, கமர்ஷியல் விளம்பரம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இருவரிடமும் நடந்து வருகிறது என்றார்.தமன்னா தந்தை பாட்டியா கூறும்போது, ‘ஆந்திராவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் தூதராக தமன்னா இருக்கிறார். அவர்களின் கமர்ஷியல் விளம்பர படமொன்றில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.  பாலிவுட்டில் ஹிம்மத்வாலா படத்தில் தமன்னா நடிக்கிறார்.

இதுதவிர டோலிவுட் படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறோம். விளம்பர படத்தில் நடிப்பதற்கான தேதி ஒதுக்கி தரவும் முடிவு செய்திருக்கிறோம் என்றார். புது ஹீரோயின்கள் வருகையால் மவுசு குறைந்திருக்கும் தமன்னாவுக்கு இந்த விளம்பர படம் புத்துணர்வு தரும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த விளம்பர படத்தில் நடிக்க கோஹ்லியை தமன்னா சந்தித்து பேசியதாகவும் இருவருக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசு பரவியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக