திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளத்தில் சமுக விரோதிகள் கைவரிசை, தீவைப்பு! எங்கும் ஒரே புகை மூட்டம்!!

கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் துவங்கிய பெரும் கலவரம், கூடங்குளம் கிராமத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கிராமம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காணப்படுகிறது. கூடங்குளம் கிராமத்தில் கடும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. கூடங்குளத்தில் சமுக விரோதிகள் கைவரிசை
கிராமம் முழுவதும் ஆங்காங்கே சிலர் தீவைப்பில் குதித்துள்ளனர். தீ வைப்பவர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. காரணம், அரசு சொத்துக்களை மட்டும் இவர்கள் தீவைக்கவில்லை. பொதுமக்களுக்கு சொந்தமான சில சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. “இவர்கள் எல்லாம் யார்?” என்று சில பொதுமக்களே கேட்கும் நிலை காணப்படுகிறது.
ஊராட்சி மன்ற அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளது. ஊரைச் சுற்றிலும் ஆங்காங்கே தீ வைக்கப்பட்டுள்ளது. சில குடிசைகள்கூட தீவைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடிசைகள் யாருக்கு சொந்தமானவை, ஏன் தீவைக்கப்படுகின்றன என்பதில் ஒரே குழப்பம் நிலவுகிறது. சுற்றிலும் புகைமூட்டமாக மாறியுள்ளது.
கூடங்குளம் கிராமத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸ் தடியடி நடத்தி அடித்து கலைத்து விட்டனர். தற்போது கடற்கரையில் போராட்டக்காரர்கள் யாருமில்லை.Viruvirupu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக