திங்கள், 10 செப்டம்பர், 2012

உதயகுமார் தலைமறைவு! போலீசை தாக்கிய போராட்டக்காரர்கள்

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை எதிர்த்து போராட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இன்று அணுமின் நிலையத்தின் பின்புறமாக, கடல் வழியாக வந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றார்கள். முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் போலீசாரால்  தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ஐ.ஜி.,ராஜேஸ்தாஸ் போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நேரத்தில் இதில் ஆவேசமுற்ற ஒரு சிலர் ஐ.ஜி.,யுடன் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினர்.' அப்போது போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இதனையடுத்து அவரை மீட்க போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியது. போலீஸ் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடலில் இறங்கினர். சிலர் கடலில் நீந்திச்சென்றனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் ஏறி தப்பிவிட்டார். ப்போராட்டத்தை தூண்டிவிட்டதாக அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.
இதையடுத்து உதயகுமாரை தேடி இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது. இடிந்தகரை தேவாலயத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை நடத்தியது போலீஸ். மேலும் இடிந்தரையில் உள்ள அனைத்து வீடுகளிலும் நுழைந்து உதயகுமாரை தேடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக