புதன், 19 செப்டம்பர், 2012

ஜார்ஜியாவில் அனுஷ்காவை நாய் கடித்து விட்டது

யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. 
படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நாய், ஓடிச்சென்று அந்த டிஷ்யூ பேப்பரை கவ்வி சாப்பிட ஆரம்பித்திருக்கிறது.
உடனே அனுஷ்கா, பதறி விட்டார். டிஷ்யூ பேப்பரை சாப்பிட்டால், நாயின் உடல்நலம் பாதிக்கும். பேதியாகும். எனவே ஓடிச்சென்று நாயின் வாயை பற்றி திறந்திருக்கிறார். அத்துடன் தன் கையை நாயின் வாயில் விட்டு அந்த டிஷ்யூ பேப்பரை முழுமையாக எடுக்க முயன்றிருக்கிறார். நாய்க்கு இது பிடிக்கவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த உயிரினம்தானே? எனவே எங்கே தன் உணவை பறிக்க அனுஷ்கா முயல்கிறாரோ என்று நினைத்து கோபத்துடன் அவர் கையை கடித்து விட்டது.நாய்

 நாய் கடியையும் தன் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். முழுமையாக டிஷ்யூ பேப்பரை நாயின் வாயில் இருந்து எடுத்த பிறகே தன் கையை வெளியே எடுத்தார். நாயை காப்பாற்றிய திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. இதன் பிறகு நாய் கடித்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் அனுஷ்கா ஊசி போட்டார் ,
 ஒரு தெருநாய் அதுவும் சினிமா யூனிட்டின் எச்சில் பருக்கைகளை உண்டு வாழும் நாயின் கடியை பொறுத்துக்கொண்டு அனுஷ்கா செய்திருப்பது சாதாரணமான செய்கையல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக