செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மதபோதகரின் மனைவி போலீசில் புகார் இச்சையை தீர்க்க வீட்டிற்குள் பூட்டி

சென்னை: என்னை தனது இச்சையைத் தீர்க்கவும், வேலைக்காரி போலவும்தான் எனது கணவர் நடத்துகிறார். என் மீது சந்தேகப்பட்டு வீட்டிலேயே பூட்டி வைத்து சித்திரவதை செய்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருபவர் 38 வயதான சங்கீதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழுதபடி வந்தார். அங்கு அவர் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். எனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக நான் எனது கணவருடன் வாழ்கிறேன். அவர் தனது இச்சையை தீர்த்துக்கொள்ளவும், வீட்டு வேலைகளை செய்யவும் என்னை ஒரு வேலைக்காரி போல வைத்துள்ளார்.
எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் படுக்கை அறையில் என்னை அடித்து துன்புறுத்துகிறார். என்னை தற்கொலை செய்துகொள்ள சொல்கிறார்.
என்னை ஏமாற்றி ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்துள்ளார். மத போதகரான அவர் நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். என்னை வீட்டில் பூட்டி சிறை வைத்திருந்தார். அவரிடம் இருந்து தப்பி வந்துள்ள என்னை எந்த நேரத்திலும் கொலை செய்துவிடுவார். அவரது அடியாட்கள் என்னை தேடுகிறார்கள்.

எனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, எனது கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு கமிஷனர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக